Uncategorized

மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப இதுவே வழி – எரான் விக்ரமரத்ன வெளிப்படை


இலங்கையை நெருக்கடி நிலைக்குள் தள்ளிய 4 குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் மாத்திரமே மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.



இலங்கையை அபிவிருத்தி செய்யும் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய பயணத்தில் அதற்கான புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.


இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப இதுவே வழி - எரான் விக்ரமரத்ன வெளிப்படை | Country Rebuilt Prosecute 4 Criminals Sl Crisis


இலங்கை வாழ் மக்களின் பிரச்சினைகளை தெரிந்து கொள்வதோடு அவற்றுக்கான தீர்வுகளை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். அதற்கான வேலைத்திட்டங்களை நாம் ஏற்கனவே தயாரித்து விட்டோம்.



மக்களின் வாக்குகளால் நாம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் எமது திட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும்.



முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் தவறான நிர்வாகமும் அவர்களது தனிப்பட்ட முடிவுகளுமே இன்றைய இலங்கையின் நிலைக்கான முக்கிய காரணம்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி

மீண்டும் நாட்டை கட்டியெழுப்ப இதுவே வழி - எரான் விக்ரமரத்ன வெளிப்படை | Country Rebuilt Prosecute 4 Criminals Sl Crisis



இலங்கையில் நடைபெறும் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.



சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு ஒரு வருட காலத்திற்கு முன்னதாக நாம் தெரிவித்திருந்த போதும் அதனை, அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் நிராகரித்திருந்தனர்.



அப்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்திருந்தால் நாடு இன்று இந்த நிலையை எதிர்நோக்கி இருக்காது” என்றார்.  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *