ராஜபக்சாக்களின் முகங்கள்
மொட்டு கட்சியின் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் பின்பக்கத் திரையில் ராஜபக்சாக்களின் முகங்கள் தோன்றுவதை நிறுத்தியிருப்பதை காணமுடிந்தது.
அதன்படி, இன்று நடைபெற்ற மொட்டு கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில், பின்பக்கத் திரையில் இருந்து கட்சியின் இலட்சினையை மாத்திரமே காண முடிந்தது.
எனினும் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் இலட்சினையை தவிர்த்து மஹிந்த-கோட்டா-பசிலை பார்க்க முடிந்தது.
மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை
இதற்கு முன்னரும் இவ்வாறு கோட்டாபய ராஜபக்சவின் படத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு பின்னர் அது ஊடகங்களில் வெளியானதை அடுத்து மீண்டும் அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.