Uncategorized

மூடிய அறைக்குள் ரணில் – சொல்கெய்ம் சந்திப்பு – விபரங்களை வெளியிட மறுப்பு


இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானப் பிரதிநிதி எரிக் சொல்கெய்மிற்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான இரகசிய சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படாமை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.


நேற்றுக் காலை இடம்பெற்ற இந்தச் சந்திப்பு குறித்து அதிபர் தரப்பில் இருந்து இன்று வரை எந்தவொரு விடயங்களுக்கும் பகிரங்கப்படுத்தப்படாத நிலையில், தாம் ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை தொடர்பான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக எரிக் சொல்கெய்ம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக இன்று காலை தெரிவித்துள்ளார்.

ரணிலின் சர்வதேச காலநிலை தொடர்பான ஆலோசகர்

மூடிய அறைக்குள் ரணில் - சொல்கெய்ம் சந்திப்பு - விபரங்களை வெளியிட மறுப்பு | Ranil Solheim Secret Meeting


இதேவேளை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அதிபரின் உள்ளூர் ஆலோசரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவருமான ருவன் விஜயவர்தன ஆகியோரையும் எரிக் சொல்கெய்ம் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எரிக் சொல்கெய்ம், நேற்று செவ்வாய்க்கிழமை காலை அதிபர் ரணில் விக்ரமசிங்கவை, சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.



இந்தச் சந்திப்பு தொடர்பில் அதிபர் ஊடகப் பிரிவு, எந்தவொரு அறிக்கையிடலையும் வெளியிடாத நிலையில், மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத்துடன் இணைந்து அதிபரின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதில் பெருமிதம் அடைவதாக எரிக் சொல்கெய்ம் இன்று காலை டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.


அதிபர் பசுமை பொருளாதார மீட்சி மற்றும், இலங்கையின் காலநிலை தலைமைத்துவத்திற்கான தொலைநோக்கு பார்வையை கொண்டிருப்பதாக எரிக் சொல்கெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த நிலையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஸவுடனான சந்திப்பில் எரிக் சொல்கெய்ம் அவரை கட்டித் தழுவியமை இருவருக்கு இடையிலான நெருக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச – எரிக் சொல்கெய்ம் சந்திப்பு

மூடிய அறைக்குள் ரணில் - சொல்கெய்ம் சந்திப்பு - விபரங்களை வெளியிட மறுப்பு | Ranil Solheim Secret Meeting


கொழும்பிலுள்ள, முன்னாள் அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்கெய்ம் நியமிக்கப்பட்டமைக்கு இதன்போது மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.



அத்துடன் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தையாளராக எரிக் சொல்கெய்ம் ஆற்றிய பங்களிப்பை மஹிந்த ராஜபக்ச நினைவுகூர்ந்துள்ளார்.


இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட எதிர்மறையான தாக்கங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.


நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், நோர்வே முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறும் குறிப்பாக கடல்சார் முதலீடுகளை செய்யுமாறும் எரிக் சொல்கெய்மிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


கடல்சார் திட்டங்களில் நோர்வே முக்கிய பங்காற்ற முடியும் என சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான முக்கிய திட்டங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் எனவும் தெரிவித்தார்.


இதற்குப் பதிலளித்த எரிக் சொல்கெய்ம், இலங்கைக்கு நோர்வேயின் ஒத்துழைப்பு தொடர்பில் உறுதியளித்ததுடன், இரு நாடுகளும் எவ்வாறு ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சந்திப்பில் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவனும் கலந்துகொண்டிருந்தார்.

மூடிய அறைக்குள் ரணில் - சொல்கெய்ம் சந்திப்பு - விபரங்களை வெளியிட மறுப்பு | Ranil Solheim Secret Meeting

ருவன் விஜயவர்த்தன – எரிக் சொல்கெய்ம் சந்திப்பு


இதேவேளை, ருவன் விஜயவர்த்தனவிற்கும் எரிக் சொல்கெய்ம்மிற்கும் இடையிலான சந்திப்பில் எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் மற்றும் அதற்கு கிடைக்கக்கூடிய சர்வதேச ஆதரவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.



இந்தச் சந்திப்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அனில் ஜாசிங்க, காலநிலை அபாய மாநாட்டிற்கான இலங்கையின் பிரதிநிதியான சந்தித் சமரசிங்க உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.

சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் – எரிக் சொல்கெய்ம் சந்திப்பு



இதேவேளை சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டை அவரது அமைச்சில் எரிக் சொல்கெய்ம் சந்தித்துள்ளதுடன், இதன்போது காலநிலை மாற்றம், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சூழல் பாதிப்புக்கள், அதனை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.



சுற்றாடல் அமைச்சில், காலநிலை மாற்றம் குறித்த பல்துறை நிபுணர்கள் கொண்ட “மனிதவள” அலகு ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *