கனமழை
இலங்கையின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
இடி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.