Uncategorized

சிறிலங்கா தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அறிவிப்பு – தரமிறக்கப்படும் கணிப்பு!


இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023ல் 3 வீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் 2027ஆம் ஆண்டுக்குள் நாடு 3.7 சதவீதம் வளர்ச்சி அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அவதானத்தையடுத்து நேற்று அறிவிக்கப்பட்ட அண்மைய அறிக்கைகளின்படி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சர்வதேச நாணய நிதியம் 2023 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வளர்ச்சி கணிப்புகளை தரமிறக்குவதாக அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அவதானிப்பு

சிறிலங்கா தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அறிவிப்பு - தரமிறக்கப்படும் கணிப்பு! | Imf Dollar Sri Lanka Economic Crisis World Bank

அதுமட்டுமன்றி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுருங்குவதை சர்வதேச நாணய நிதியம் அவதானித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிப்பது குறித்து கவனம் செலுத்தும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் சர்வதேச நாணய நிதியமும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

உலக வங்கியின் கணிப்பு

சிறிலங்கா தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அறிவிப்பு - தரமிறக்கப்படும் கணிப்பு! | Imf Dollar Sri Lanka Economic Crisis World Bank

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.7 சதவீதமாக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.


எவ்வாறாயினும் இந்த மாத முற்பகுதியில் உலக வங்கி, இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 9.2 சதவீதமாகவும் 2023 இல் 4.2 சதவீதமாகவும் குறையும் என்றும் கணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *