சட்டவிரோதமான முறை
சட்டவிரோதமான முறையில் வாகன உதிரிப்பாகங்களை சேகரித்து அதிசொகுசு கார் ஒன்றை உருவாக்கி, அதற்கு போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்ய முயன்ற நபரைகாவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாராஹென்பிட்ட ஷாலிகா விளையாட்டு மைதானத்திற்கு அருகில் பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளினால் சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான குறித்த வாகனத்தை 25 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யச் சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகனத்தின் இலக்கத்தகடு
இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள எண் நெனோ கெப் ரக வாகனத்தின் இலக்கத்தகடு என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.