Uncategorized

யாழ்ப்பாணத்தில் பனம் கள்ளு எனக்கு கிடைக்கவில்லை..! இராஜாங்க அமைச்சர் நகைச்சுவை


யாழ்ப்பாணத்தில் பனைமரங்கள் இருக்கின்றபோதும் பனம்கள்ளை பெறுவதற்கான வழிவகைகள் தனக்கு கிடைக்கவில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த நகைச்சுவையாக தெரிவித்தார்.


பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் இன்றைய தினம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டபோது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை நகைச்சுவையாக தெரிவித்தார்.

மேற்குலக நாடுகளில் அதிக கேள்வி

யாழ்ப்பாணத்தில் பனம் கள்ளு எனக்கு கிடைக்கவில்லை..! இராஜாங்க அமைச்சர் நகைச்சுவை | Palmyrah Development Board Jaffna Lohan Ratwatte

பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ள இடமாக யாழ்ப்பாணமும் காணப்படுகின்றது. இன்று காலை நாங்கள் வந்து பனம் கள்ளை தேடிய போது யாழ்ப்பாணத்தில் பனம் கள்ளு எனக்கு கிடைக்கவில்லை என்றார்.



மேலும் தெரிவிக்கையில், இங்கே உற்பத்தி செய்யப்படும் பனை உற்பத்தி பொருட்களுக்கு மேற்குலக நாடுகளில் அதிக கேள்வி காணப்படுகின்றது, பனை அபிவிருத்தி கைத்தொழிலானது மிகவும் அபிவிருத்தி அடைவதோடு வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உதவ வேண்டும் என்றார்.


45 வருடங்களாக வாடகை வீட்டில் செயல்பட்டுவந்த பனை அபிவிருத்தி சபைக்கு இன்றைய தினம் சொந்தமானதொரு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *