ரணில் என்பவர் ஒரு நடிகர் மட்டும் தான் அவரை ராஜபக்ஸ குடும்பத்தினரே இயக்குவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு லட்சம் ரூபா வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ரணில் விக்ரமசிங்கவின் அரசு மாற்றிக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ராஜபக்ஸர்கள் கொள்ளையடித்த பணம்
ஒரு லட்சம் ரூபா என்பது தற்போதைய காலகட்டத்தில் சாதாரண வருமானம் எனவும், 5 லட்சம் ரூபா வருமானம் ஈட்டுவோருக்கு இவ்வாறு வரி செலுத்தச் சொல்வதே சரியான தீர்மானமாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, தற்போதைய அரசு மக்களை கசக்கிப் பிழிந்து பணம் பெறுவதை தவிர்த்துவிட்டு, ராஜபக்ஸர்கள் கொள்ளையடித்த பணத்தை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டுமெனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.