மன்னர் சார்ல்ஸ் பங்கேற்பது முக்கியம்
எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை எகிப்தில் நடைபெறவுள்ள சிஓபி 27 மாநாட்டில் மூன்றாம் சார்லஸ் மன்னர் பங்கேற்பது முக்கியமானது என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிஓபி 27 மாநாட்டில் பங்குபற்றுவதற்கு மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் தீர்மானித்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே அதிபர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தின் விளைவு
மன்னர் சார்லஸ் III, காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தணிப்பதற்காக நீண்டகாலமாக அனுசரணையாளராக இருந்து, கடந்த ஆண்டு COP 26 இல் தொடக்க உரையை நிகழ்த்தினார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகராக நோர்வேயின் முன்னாள் சுற்றாடல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த மாதம் எகிப்தில் நடைபெறவுள்ள கோப் 27 உச்சி மாநாட்டில் அதிபர் பங்கேற்க உள்ளார்.