பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தை, இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்காக, அமெரிக்காவிற்கு இங்கிலாந்து குத்தகைக்கு வழங்கியுள்ள நிலையில், அங்கு புகலிட கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்கள் பல மாதங்களாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய சுமார் 100க்கும் மேற்பட்ட இலங்கையின் புலம்பெயர்ந்தோரை சொந்த விருப்பத்தின் பேரில் விமானம் மூலம் நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கு பிரித்தானிய அரசாங்கம் இதுவரை உதவியுள்ளது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஏதிலிகள் தொடர்பில் இங்கிலாந்து அரசாங்கத்தின் நிலைப்பாடு
அதேநேரம் அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பும் போது துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள டியாகோ கார்சியாவில் தங்கவைக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
எனினும் பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள், தடுப்புக்காவலில் வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் அமெரிக்க இராணுவ தளம்
இவ்வாறான நிலையில், பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தை, இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்காக, அமெரிக்காவிற்கு இங்கிலாந்து குத்தகைக்கு வழங்கியுள்ளது.
அங்கு புகலிடம் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கையர்கள் பல மாதங்களாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் உள்ள ஏதிலிகள் மறுவாழ்வு முகாம்களில் இருந்து சென்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.