உலகில் உள்ள ரத்த வகைகளில் பொதுவாக நமக்கு தெரிந்ததை விட ஒரு அரிய வகை ரத்தம் ஆர்.எச் என ரத்தவகையாகும்.
உலகம் முழுவதும் வசிப்பவர்களில் 45 பேரிடம் மட்டும்தான் உள்ளது. இந்த ரத்த வகை பூஜ்ஜிய ரத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ரத்தத்தின் ஒரு துளி கூட தங்கத்தை விட அதிக விலை கொண்டதாக மதிப்பிடப்படுகிறது.
அதனால்தான் உலகின் மிக அரிதான இந்த ரத்த வகை தங்க ரத்தம் (கோல்டன் பிளட்) என்றும் வர்ணிக்கப்படுகிறது.
ரத்தத்தின் சிறப்பம்சம்
இந்த ரத்தத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்ன வென்றால் இதில் ஆன்டிஜென்கள் இல்லை. அதாவது, இந்த ரத்தத்தை எந்தவொரு ரத்த வகையை கொண்ட நபர்களுக்கு கொடுத்தாலும், அவரது உடல் அதை ஏற்றுக்கொண்டு விடும்.
ஜப்பான், பிரேசில், கொலம்பியா, அயர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ரத்த வகையை கொண்ட நபர்கள் வசிக்கிறார்கள்.
இந்த அரிய வகை ரத்தம் உள்ளவர்களுக்கு, ஆர்.எச் காரணி நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இல்லை.
இத்தகைய ஆன்டிஜென்கள் இல்லாததால் இந்த ரத்த வகையை சேர்ந்தவர்கள் எளிதில் ரத்தசோகை பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
அரிய வகை ரத்தத்தை கொண்டிருக்கும் இவர்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்ய வேண்டும், அப்போது தான் தேவைப்படுபவர்களுக்கு உடனே செலுத்த முடியும்.