Uncategorized

விசேட அதிரடி படையினரால் 111 கைகுண்டுகள் மீட்பு..! யாழ்.மானிப்பாயில் சம்பவம்


மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை காவல்துறை விசேட அதிரடி படையினரால் 111 கைகுண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் காணியொன்றினை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழவுக்குட்படுத்திய நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளை அவதானித்துள்ளார்.



இதனையடுத்து இது குறித்து மானிப்பாய் காவல்துறையினருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் காவல்துறையினர் கைக்குண்டுகளை அடையாளம் கண்டனர்.

111 கைக்குண்டுகள் 

விசேட அதிரடி படையினரால் 111 கைகுண்டுகள் மீட்பு..! யாழ்.மானிப்பாயில் சம்பவம் | 111 Hand Grenades Were Found Special Action Forces

இந்நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று இன்று 14ம் திகதி காலை 6மணிமுதல் யாழ் மாவட்ட காவல்துறை விசேட அதிரடிப்படையினால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.



இதனையடுத்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *