Uncategorized

அம்மான் படையணி..! மது மாத்திரமன்றி மாதுவிற்கும் அடிமை – அம்பலமான தகவல் (காணொளி)


படையணி 

வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதால் அதை கட்டுப்படுத்த கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இளைஞர் படையணி ஒன்று உருவாகியிருப்பதாக அறிந்ததாகவும் அது நகைச்சுவையான விடயம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


போதை பொருள் பாவனையை அவர் தடுத்து நிறுத்த போவதாக கூறுகின்றார் ஆனால் அவருடைய போதை பொருள் பாவனையை யார் நிறுத்துவது என்பதே கேள்வி எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


24 மணித்திலத்தில் 20 மணித்தியாலம் போதையில் இருக்கும் விநாயகமூர்த்தி முரளிதரன் எவ்வாறு போதையை தடுத்து நிறுத்த போகின்றார் எனவும் கேள்வியெழுப்பினார்.

மது மாத்திரமன்றி, மாதுவிற்கும் அடிமை

அம்மான் படையணி..! மது மாத்திரமன்றி மாதுவிற்கும் அடிமை - அம்பலமான தகவல் (காணொளி) | Ltte Karuna Amman Sri Lanka

வடக்கு கிழக்கை அவர் திருத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் முதலாவதாக அவர் அந்த பாவனையில் இருந்து விடுபட்டால் நாளடைவில் அனைவரும் திருந்தி கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.



விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கு கிழக்கில் முழுமையான கட்டுப்பாட்டில் போதைப்பொருள் பாவனை இருந்ததாகவும், விடுதலை புலிகளின் அமைப்பில் இருந்து வெளியே வந்த பின் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) முழுமையான போதை பழக்கத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார்.


அது மட்டுமல்லாது,விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) மது மாத்திரமன்றி, மாதுவிற்கும் அடிமையாய் இருந்தவர் என்றும் சுட்டிக்காட்டினர்.

காணொளி



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *