இரண்டாவது சுனாமி அலை
அரசாங்கத்துக்கு எதிரான இரண்டாவது சுனாமி அலை வருமென்கிற கடும் அச்சத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
போராட்டக்காரர்களுக்கு பயங்கரவாத முத்திரை
போராட்டக்காரர்களுக்கு பயங்கரவாத முத்திரையை குத்தவே ரணில் தொடர்ந்து முயல்கிறார். வசந்த முதலிகே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
போராட்டக்காரர்களை புனர்வாழ்வுக்குட்படுத்தவும் சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.