Uncategorized

மாணவர்களை தாக்கிய பிரதி அதிபர் குற்றவாளி – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உடல் ரீதியான தண்டனை

கடந்த  2011 ஆம் ஆண்டு அக்குரம்பொட, பல்லேபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உடல் ரீதியான தண்டனை அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என இலங்கை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பாடசாலையின் பிரதி அதிபருக்கு எதிராக இரண்டு மாணவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மாணவர்களை தாக்கிய பிரதி அதிபர் குற்றவாளி - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Sc Finds Deputy Principal Guilty


பாடசாலையின் சாப்பாட்டு மண்டபத்தின் கண்ணாடிகளை உடைத்ததற்கு இரண்டு மாணவர்களே காரணம் என்று கருதி பிரதி அதிபர் இரண்டு மாணவர்கள் மீதும் தடியடி நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களின் கருத்தை புறக்கணித்த பிரதி அதிபர்

மாணவர்களை தாக்கிய பிரதி அதிபர் குற்றவாளி - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Sc Finds Deputy Principal Guilty

இச்சம்பவத்திற்கு தாங்கள் பொறுப்பல்ல எனவும் மற்றொரு குழுவினரே அருகில் இருந்த மாமரத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் கண்ணாடிகள் நொருங்கியதாக மாணவர்கள் தெரிவித்ததையும் அதிபர் ஏற்றுக் கொள்ளவில்லை.

பிரதி அதிபர் தங்களின் கருத்தை புறக்கணித்ததாகவும், தம்மை பிரம்பு கொண்டு அடித்ததாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டினர்.




இந்த மனுவை நேற்று முன்தினம்(13) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், துணை அதிபரின் நடவடிக்கை மாணவர்களின் உரிமைகள் பிரிவு.11, மற்றும் 12(1)ஐ மீறுவதாகும் என தெரிவித்தது.



“மனுதாரர்கள் 1வது பிரதிவாதி மூலம் அரசியலமைப்பின் 12(1) மற்றும் 11 வது பிரிவுகளால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதை நிறுவுவதில் வெற்றி பெற்றுள்ளனர்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


மேலும், இரண்டு மாணவர்களுக்கும் தலா ரூ.75,000 தொகையை வழங்குமாறு துணை முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் தலா 25,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பிரதி அதிபருக்கு உத்தரவிடப்பட்டது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *