Uncategorized

உலகளாவிய பசி சுட்டெண் -இலங்கைக்கு கிடைத்த இடம்


இலங்கையில் பசி

உலகளாவிய பசி சுட்டெண்ணின் படி, 121 நாடுகளில் இலங்கை 64வது இடத்தில் உள்ளது. இலங்கை 13.6 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், அதன்படி இலங்கையின் பசியின் அளவு மிதமானதாகக் கருதப்படுகிறது.


2021 இல், 116 நாடுகளில் 65 வது இடத்தில் இருந்த இலங்கை 2020 இல் 64 வது இடத்தைப் பிடித்தது.

உலகளாவிய பசி சுட்டெண் -இலங்கைக்கு கிடைத்த இடம் | Sri Lanka Ranks 64Th In The World Hunger Index

உலகளாவிய பசி குறியீடு (GHI) என்பது உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் பசியை அளவிடுவதற்கான ஒரு கருவியாகும்.

தெற்காசிய நாடுகளின் நிலை

உலகளாவிய பசி சுட்டெண் -இலங்கைக்கு கிடைத்த இடம் | Sri Lanka Ranks 64Th In The World Hunger Index

தெற்காசிய நாடுகளில் இந்தியா 107வது இடத்திலும், பாகிஸ்தான் (99வது), பங்களாதேஷ் (84வது), நேபாளம் (81வது), ஆப்கானிஸ்தான் (109வது) ஆகிய இடங்களில் உள்ளன.


2022 GHI இன் படி, 5 நாடுகள் பசி ஆபத்தில் உள்ளன – மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், கொங்கோ ஜனநாயக குடியரசு, மடகாஸ்கர் மற்றும் ஏமன் – மேலும் 4 கூடுதல் நாடுகளான – புருண்டி, சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் சிரியா – தற்காலிக ஆபத்தில் உள்ளன.


காலநிலை நெருக்கடி மற்றும் உக்ரைனில் நடந்து வரும் போர், கொவிட்-19 தொற்றுநோயின் பொருளாதார விளைவுகளுடன், பசியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் உலகம் கடுமையான பின்னடைவை எதிர்கொள்கிறது என்று GHI தெரிவித்துள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *