Uncategorized

கொடிகாமத்தில் இன்று இரவு வயோதிபரை மோதி தள்ளியது ரயில்


யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில்

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிர வண்டியுடன் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கண்டி வீதி, கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் தெற்கில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரும் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் அதிகாலை 4.30 மணியளவில் தொடருந்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் தொடருந்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *