முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் நாவலப்பிட்டி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதனை முன்னிட்டு நாவலப்பிட்டி நகரில் இன்று (16.10.2022) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது 15 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களில் நாவலப்பிட்டி சமகி ஜன பலவேகய அமைப்பாளரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது,