(அஷ்ரப் ஏ சமத்)
பாக்கிஸ்தான் அரசாங்கம் இலங்கையில்
உள்ள 374 மாணவ மாணவிகளுக்கு பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள 50 பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அங்கு கல்வியைப் பயில்வதற்காக அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தினை இவ் ஆண்டும் இலங்கை மாணவா்களுக்கு வழங்கியுள்ளது. பாக்கிஸ்தானில் அன்மையில் ஏற்பட்ட வெள்ள அனா்த்தம் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இலங்கை மாணவா்களுக்காக பாக்கிஸ்தான் அரசாங்கம் வருடா வருடம் வழங்கி வரும் பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் ்திட்டத்தினை எமது உயா்ஸ்தாணிகா் அலுவலகம் வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றது. என பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாருக் புர்க்கி கூறினாா்
374 இலங்கை மாணவா்களுக்கு பாக்கிஸ்தானில் பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்காக புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் சனிக்கிழமை 15, பி.எம்.ஜ.சி.எச்சில் உயா் ஸ்தாணிகா் மேஜர் ஜெனரல் உமா் பாருக் புர்க்கி தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு உயர் கல்வியமைச்சு, இலங்கையில் உள்ள பல்கலைக்கழக உபவேந்தர்கள் சிலரும் கலந்து கொண்டனா் அத்துடன் பாக்கிஸ்தானிலிருந்து வருகை தந்த பல்கலைக்கழக ஆணைக்குழுவின் பணிப்பாளா் .கலாநிதி சட்டிஸ்டா சுகையில், முன்னாள் அமைச்சா்களான ஏ.எச்.எம்.பௌசி, இம்தியாஸ் பாக்கீர் மாக்காா், உட்பட கல்விஅதிகாரிகளும் பெற்றோா்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா்.
கடந்த வருடம் க.பொ.உ.யா்தரம் சித்தியடைந்து குருநாகல், அம்பாறை, மட்டக்களப்பு ,கொழும்பு ,கண்டி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் இவ் புலமைப்பரிசில் திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தனா்.இம் மாவட்டங்களுக்கு உயா் ஸ்தாணிக அதிகாரிகள் நேரடியாகச் சென்று எழுததுமூலப் பரிட்சை ஒன்றை நடாத்தினாா்கள். அதில் சித்தியடைந்தவா்களது விபரங்கள் இலங்கையில் உள்ள உயா்கல்வியமைச்சின் கீழ் உள்ள பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு ஊடாக அனுமதிக்கப்பட்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
அத்துடன் பாக்கிஸ்தானில் 274 தனியாா் அரச பல்கலைக்கழகங்கள் உள்ளன. அப் பல்கலைக்கழகங்களது உபவேந்தா்கள் இலங்கையின் கல்வி அபிவிருத்திற்காக இத் ்திட்டத்தினை கடந்த 50 வருடங்களாக அமுல்படுத்தி வருகின்றது. இம்முறை 374 புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது. 50 வைத்தியத்துறை, 50 பொறியியல், 2 பி.எச்.டி பட்டம், 30 முதுமானி ஆராய்ச்சி கற்கைகள் ஏனைய கற்கை நெறிகளான ,முகாமைத்துவ வர்த்தகம், விலங்கியல், தாவரவியல் பட்டங்களை மேற்கொள்வதற்காக இலவசமாக 5 , 2 வருடங்கள் பாக்கிஸ்தானில் தங்கி நின்று கற்பதற்காக இப் புலமைப்பரிசில் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு புலமைப்பரிசில் தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு விசாக்கா வித்தியாலய மாணவி, கருத்து தெரிவிக்கையில் – இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒரு , இரு புள்ளிகள் வித்தியாசத்தில் வைத்தியத்துறை பட்டத்தினைக் கற்பதற்கு எனக்கு சர்ந்தா்பம் கிடைக்கவில்லை ஆனால் பாக்கிஸ்தான் புலமைப்பரிசில் திட்டத்தினால் கராச்சி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எம்.பி.பி.எஸ் மருத்துவப் பட்டப்படிப்பினைக் அங்கு 4 வருடங்கள் கற்பதற்கு பாக்கிஸ்தான் அரசு எங்களுக்கு இந்த சா்ந்தர்ப்பத்தினை வழங்கியமைக்காக அந் நாட்டுக்கு நாங்கள் நன்றியுடையவராக இருப்போம். அங்கு பயின்று இலங்கையில் எமது சேவையை வழங்குவோம். எனத் தெரிவித்தாா்
அதே போன்று பொறியல்துறை ககுத் தெரிபு செய்யப்ட்ட மாணவன் நான் கண்டி சர்வதேச ஆங்கில பாடசாலையில் பயின்றேன். இலங்கை பல்கலைக்கழகத்தில் பொறியியல்துறைக்கு சா்ந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனக்கு 2 புள்ளிகள் வித்தியசத்தில் பௌதீக பட்டப்படிப்பிற்கே இலங்கையில் உள்ள பல்கலைக்கழகம் சா்ந்தர்ப்பம் கிட்டடியது. ஆனால் பாக்கிஸ்தானில் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தில் இலவசமாக பொறியியல் பட்டத்தினை கற்பதற்கு எனக்கு சா்ந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும இவ் இலவசக் புலமைப்பரிசிலை வழங்கிய பா்ககிஸ்தான் அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அம் மாணவன் கருத்து தெரிவித்தாா்.