யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு போதை வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் யாழ்.நகர் பகுதியில் உள்ள மூன்று புடவைக்கடைகளில் வேலை செய்து வருகின்றவர்கள் எனவும்,
போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இரகசிய தகவல்
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.