மகிந்தவிற்கு ஏற்பட்டுள்ள நிலை
“பேபி” மார்களால் தான் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தற்போதைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கடந்த அமைச்சரவையில் மூன்று ராஜபக்சாக்கள் மட்டுமே இருந்தாக குறிப்பிட்ட அவர், இம்முறை அது ஐந்தாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வரி அதிகரிப்பால் மீண்டும் கிளர்ச்சி
இதேவேளை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி அதிகரிப்பினால் சமூக அமைதியின்மை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
சமூக அமைதியின்மை மூலம் மீண்டும் ஒரு கிளர்ச்சியான சமூகப் போக்கு உருவாகலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.