Uncategorized

கனடா விபத்தில் படுகாயமடைந்த தாயாரின் நிலை- உறவினர் வெளியிட்ட அறிவிப்பு


கனடா விபத்து

கனடாவில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இணுவிலை பூர்விகமாக கொண்ட தமிழர்களான இரண்டு சகோதரர்கள் உயிரிழந்த நிலையில் சம்பவத்தில் காயமடைந்த அவர்கள் தாயாரின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


மார்க்கம் நகரில் ட்ரக் வண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதி நடந்த விபத்தில் பதீரனா புவேந்திரன் (21) மற்றும் அவரின் சகோதரி நெலுக்சனா புவேந்திரன் (23) இருவரும் உயிரிழந்தனர்.

கனடா விபத்தில் படுகாயமடைந்த தாயாரின் நிலை- உறவினர் வெளியிட்ட அறிவிப்பு | Mother Critically Injured In Canada Crash

உடல் நிலையில் முன்னேற்றம்

கனடா விபத்தில் படுகாயமடைந்த தாயாரின் நிலை- உறவினர் வெளியிட்ட அறிவிப்பு | Mother Critically Injured In Canada Crash



இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர்களின் தாய் ஸ்ரீரதி சண்முகநாதன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் உயிரிழந்த பதீரனாவின் உறவினர் துர்க்கா சர்வேஸ்வரன் கூறுகையில், பதீரனா மற்றும் நெலுக்சனாவின் மரணத்தை என்னால் நம்பமுடியவில்லை.



சிகிச்சையில் உள்ள ஸ்ரீரதி தேறி வருகிறார், உடல்நிலை மேம்பட்டு வருகின்றது என மருத்துவமனை தெரிவித்ததாக கூறியுள்ளார்.



இதேவேளை விபத்து தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 1-866-876-5423 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *