எரிபொருள் கொள்வனவு
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் இலங்கையும் ரஷ்யாவும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளன.
கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ரஷ்யாவின் பிரதிப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக்கைச் சந்தித்த போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஆதரவு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ரஷ்யாவில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் நலன் தொடர்பில் பிரதிப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக்குடன் கலந்துரையாடியுள்ளார்.
அத்தோடு, கொவிட்-19 நெருக்கடியின் போது இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய ஆதரவிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நன்றி தெரிவித்துள்ளார்.