நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் அசமந்த போக்கில் செயல்படுவதாக ஜே.வி.பி. இன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிலியந்தலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
உலக வங்கி உரங்களை கொள்வனவு செய்ய உதவியளிக்கின்றது.
அது மட்டுமல்லாமல் குறித்த நிதி உதவி முறையாக செயல்படுகிறதா என்பதை ஆராய குழுவொன்றை இலங்கைக்கு அனுப்புகின்றது.
‘மீண்டும் எழுவோம்’ என மகிந்த
அவர்கள் காலத்தை கடத்துவதற்காகவே அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளனர்.
மகிந்த ராஜபக்ஷ களுத்துறையில் ‘மீண்டும் எழுவோம்’ என கோசமிடுகிறார்.
ஆனால், அவர் எழுந்த வேகத்தை விட வீழ்ந்த வேகம் அதிகம் என நினைப்பதாக ஜே.வி.பி. இன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் அசமந்த போக்கில் செயல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.