Uncategorized

கணவனை இழந்த தாயின் கதை – உறவுப்பாலம் (பாகம் :106)


இலங்கையில் தற்போதைய நிலையில் சாதாரண நிலையை உடைய மக்களே அன்றாட உணவிற்கு பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும்.

அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல. ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும், மக்களுக்கான ஊடகங்களுக்கும் உண்டு.

இப்படி வறுமையில் வாழும் குடும்பங்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

அந்தவகையில், முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் நிலையை, அவர்களது தேவைகளை வெளிக்கொணர்கிறது ஐ.பி.சி தமிழின் ‘உறவுப்பாலம்’ நிகழ்ச்சி

ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் – 106


இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்

WhatsApp / Viber – +94767776363 / +94212030600



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *