Uncategorized

பிரான்ஸ் நாளை முடங்கும் அபாயம் – ஐபிசி தமிழ்


பிரான்சில் நிலவும் எரிபொருள் விநியோக நெருக்கடிக்கு அப்பால் நாளை பொது வேலைநிறுத்தம் ஒன்றுக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பை விடுத்துள்ளன.
இதனால் நாளை நாடளாவிய ரீதியில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


இந்த நிலையில் பிரான்சில் உள்ள 5 மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிலும் இன்று முதல் முழு வேலைநிறுத்தம் இடம்பெற்று வருகிறது.

பொது வேலைநிறுத்தம்

பிரான்ஸ் நாளை முடங்கும் அபாயம் | France Fuel Crisis Strikes Trade Union


பிரான்சில் மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இடம்பெறும் வேலை நிறுத்தத்தால் கடந்த 2 வார காலத்துக்கும் மேலாக எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடி தொடர்கின்றது.



இந்த நிலையில் நாளை பொது வேலைநிறுத்தம் ஒன்றுக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.


இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குகொண்டு வரும் வகையில் சிறிய தொழிற்சங்கங்கள் எண்ணெய் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருந்தாலும், பிரதான தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடர்வதால் நெருக்கடி நிலை தொடர்கிறது.

எரிபொருள் விநியோகம்

பிரான்ஸ் நாளை முடங்கும் அபாயம் | France Fuel Crisis Strikes Trade Union


கடந்த வார இறுதியிலும் எரிபொருள் விநியோகம் சீராகாத நிலையில், நாளை பொது வேலைநிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



இந்தப் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டுநின்றால் நாளைய நிலைமை மேலும் மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *