Uncategorized

பொருளாதார நெருக்கடியால் இங்கிலாந்தில் உள்ள சிறுவர்களின் லஞ்ச் பாக்ஸ்களில் உணவு இல்லை


தற்போதைய பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மாத்திரம் மாத்திரமல்ல, இது உலகளாவிய நிலைமை என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும், இங்கிலாந்தில் உள்ள குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்களில்  உணவு இல்லை என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இங்கிலாந்தில் உள்ள சிறுவர்கள் சாப்பாடு  நேரத்தில்   விளையாட்டு மைதானத்திற்கு செல்வதாக மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஒன்றாக எழுவோம்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டாவது பொதுக்கூட்டத்தில் நாவலப்பிட்டியில் (16) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், பிரான்சில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது,  எனவே ராஜபக்சக்கள் இங்கிலாந்தையும், பிரான்ஸையும் ஆட்சி செய்தார்களா என்று மஹிந்தானந்த அளுத்கமகே பொதுக்கூட்டத்தில் வினவினார்.





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *