Uncategorized

கொழும்பு தாமரை கோபுரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு


பார்வையிடும் நேரத்தில் மாற்றம்

கொழும்பு தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.



அதன்படி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நுழைவுச்சீட்டு விற்பனை செய்யப்படும், பொதுமக்கள் இரவு 10.00 மணி வரை கோபுரத்தை பார்வையிடலாம்.

கொழும்பு தாமரை கோபுரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Lotus Tower Visiting Hours Amended



சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 09.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நுழைவுச்சீட்டுகள் விற்கப்படும், பொதுமக்கள் தாமரை கோபுரத்தை இரவு 11.00 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.

முன்கூட்டியே முன்பதிவு

கொழும்பு தாமரை கோபுரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Lotus Tower Visiting Hours Amended


பாடசாலை மாணவர்களுக்கான சிறப்புச் சுற்றுலாக்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகபூர்வ வருகைகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


074-2019743/ 0112 – 421874/ info@colombolotustower.lk இலக்கம் அல்லது இணையத்தள முகவரியை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Gallery



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *