Uncategorized

யாழ் வடமராச்சியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் மீட்பு!


 யாழ்ப்பாணம் , வடமராட்சி வல்லிபுர குறிச்சி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



குறித்த நபரை நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



வல்லிபுர குறிச்சி பகுதியில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் ஒருவர் காணப்படுவதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலதிக விசாரணை

யாழ் வடமராச்சியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் மீட்பு! | One Person Was Rescued With Cuts Jaffna

இந்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்த குறித்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *