Uncategorized

மகிந்தவுக்கு பிரதமர் பதவி – தீவிர கலந்துரையாடலில் நாமல்..! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்


முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் பொதுஜன பெரமுனாவுக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



நாமல் ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் தலைமையில் குறித்த கலந்துரையாலடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.


அத்துடன், தற்போது பிரதமர் பதவியில் உள்ள தினேஷ் குணவர்தனவும் தனது பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மகிந்தவின் பிறந்தநாள் பரிசு

மகிந்தவுக்கு பிரதமர் பதவி - தீவிர கலந்துரையாடலில் நாமல்..! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் | Prime Minister Post To Mahinda Rajapaksha 



இதேவேளை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பிறந்த நாள் பரிசாக பிரதமர் பதவியை வழங்க பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.


அதற்காக பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடனான கடிதத்தை தயார் செய்ய பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில், நாளைய தினம் மகிந்த ராஜபக்ச தனது 77 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *