நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் இயலுமை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இருக்கின்றபோதிலும் அதற்கு ஒரு போதும் ராஜபக்சர்கள் இடமளிக்கமாட்டார்கள்.
இவ்வாறு தெரிவித்தார் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணிலால் முடியும்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும், ஆனால் அதற்கு ராஜபக்சர்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.
ராஜபக்சர்கள் நெருங்கினால், எந்த நேரத்திலும் அதிபர் ரணில் பின்வாங்க நேரிடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
ராஜபக்சர்கள் மீண்டும் எழுச்சி பெறுவது கடினம்
மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ள நிலையில், ராஜபக்சர்கள் மீண்டும் எழுச்சி பெறுவது கடினம்.
ராஜபக்சக்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்த அவர், அதிபர் ரணில் எதிர்பார்த்த உதவிகள் இதுவரை கிடைக்கப்பெறாததால் எதிர்வரும் வருடம் மேலும் நெருக்கடிகள் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார்.