கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணையை கோரி இன்று காலை முதல் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பு – பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியலயத்தின் முன்பாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நீதி கோரும் தாய்மார்
இந்த போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் உறவினர்கள் என பெருந்திரளானோர் கலந்து தமக்கான நீதியைப் பெற்றுத்தரக் கோரி ஐ.நா காரியாலயத்திற்கு முன் கதறியழுதுள்ளனர்.
இதன் புாது பல்வேறு கோசங்களை எழுப்பி தமது கோரிக்கையை முன்வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.