Uncategorized

தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் – இந்தியாவுடன் பேச்சு நடத்த ஆலோசனை


இந்திய அரசாங்கம் இலங்கை அரசுக்கு நிபந்தனை இல்லாமல் செய்கின்ற உதவிகளைத் தவிர்த்து, நிபந்தனையுடன் உதவி செய்யவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகள் விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.



அக்கட்சியின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட மறைந்த தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு ஞயிற்றுக்கிழமை(16) மாலை மட்டக்களப்பு பெரியகல்லாற்றில் இடம்பெற்றது.



இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடு

தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் - இந்தியாவுடன் பேச்சு நடத்த ஆலோசனை | Tamil Parties Talks With India Advised Sivasakthi


“அரசாங்கத்தில் பல்வேறுபட்ட குழப்பங்களும், தென்பகுதியிலே பல்வேறுபட்ட குழப்பங்களுடன் மிகவும் மோசமானதாகவும் இருந்தாலும்கூட தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாட்டை கைவிடுவதாக இல்லை.



ஐ.நா சபையிலே இருக்கின்ற போர்க்குற்றம், பொறுப்புக்கூறல் போன்ற விடங்களை எப்படி நீத்துப் போகச் செய்யலாம், அல்லது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினூடாக கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை எவ்வாறு இல்லாமல் செய்யலாம், வல்லரசுகள் இந்த அரசாங்கத்தை எதிர்க்கின்றபோது, அந்த வல்லரசுகளின் தேவைகளை நிறைவேற்றுகின்றபோது இந்த அரசாங்கம் நாட்டின் சில பகுதிகளை சில வல்லரசுகளுக்கு விட்டுக் கொடுப்பதனூடாக தமிழ் மக்களுக்குக் கிடைக்கின்ற உரிமைகளை நீத்துக்போகத்தான் செய்கின்றார்கள்.


எங்களது கட்சியினால் கொண்டு வரப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசாங்கம்கூட எதிர்காலத்தில் எமது கையைவிட்டு நழுவிப்போகும் நிலமைதான் உள்ளது.

அதற்கான பேரம்பேசல்கள், அதற்காக வல்லரசுகளுக்கு சில இடங்களை தாரைவார்த்துக் கொடுத்து தமிழர்களுக்கு அதனை இல்லாமல் செய்யும், வேலைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இலங்கை – இந்திய ஒப்பந்தம்

தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் - இந்தியாவுடன் பேச்சு நடத்த ஆலோசனை | Tamil Parties Talks With India Advised Sivasakthi



எனவே தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் தமக்குள்ளே இருக்கின்ற விருப்பு வெறுப்புக்களைக் கடந்து தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அனைவரும் ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.


இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசு 4 பில்லியன் நிதி உதவி செய்துள்ளது. எனவே இந்திய அரசாங்கம் இலங்கை அரசுக்கு நிபந்தனை இல்லாமல் செய்கின்ற உதவிகளைத் தவிர்த்து நிபந்தனையுடன் உதவி செய்யவேண்டும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்கவேண்டும் என்பதை இந்திய அரசுக்கு தமிழ் கட்சிகள் வலியுறுத்த வேண்டும்.

இதற்கெல்லாம் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் விட்டால் மாகாண சபை முறைமையும் கைநழுவிப்போகும்.



யுத்தம் முடிந்து 12 வருடங்கள் கழிந்த பின்னரும், ஐ.நா மனித உரிமை பேரவையிலும்கூட போர்குற்றம், என்பன கைநழுவிப்போகின்ற நிலமை இருக்கின்றது.



எனவே நாம் அளப்பெரிய தியாகங்களை இந்த மண்ணிலே செய்திருக்கின்றோம். எமது கட்சியில் மாத்திரம் சுமார் 3000 இற்கு மேற்பட்ட தோழர்கள் உயிர் நீர்த்துள்ளார்கள். அதிகளவு போராளிகள், 150000 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், பில்லியன் கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.

புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய காலம்

தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டிய தருணம் - இந்தியாவுடன் பேச்சு நடத்த ஆலோசனை | Tamil Parties Talks With India Advised Sivasakthi



இவைகளையெல்லம் கருத்திற்கொண்டு, தமிழ் கட்சிகள் புத்திசாலித்தனமாக, இராஜதந்திர ரீதியாக, அறிவுபூர்வமதாகச் சிந்தித்து, பூகேள ரீதியான அரசியலையும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய காலம் நெருங்கி வந்துள்ளது.



அதற்காக வெகுவிரைவிலே தமிழ் கட்சிகளுக்கிடையே ஒன்றுபட்டுச் செயற்படுவதற்கான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

எனவே மக்களுடைய துயரங்களைக் கருத்திற்கொண்டு அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும்” என்றார். 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *