அநுராதபுரம், ரிதிபதியெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (17) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நாகொல்லாகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அனுராதபுரத்தில் இருந்து பாதெனிய நோக்கி பயணித்த மகிழுந்து ஒன்று வீதிக்கு அருகில் உள்ள மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களை மகிழூந்திலிருந்து வெளியே எடுக்க சுமார் 20 நிமிடங்கள் ஆனதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
மேலதிக சிகிச்சை
இதனையடுத்து, காயமடைந்த மூவர் வாரியபொல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிறுவனும் ஏனைய இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அனுராதபுரத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.