Uncategorized

12 வயது சிறுமி வன்புணர்வு..! சித்ரவதை செய்து கொலை – 24 வயது பெண் உட்பட இருவர் கைது


வன்புணர்வு

பிரான்ஸில் 12 வயது சிறுமியை வன்புணர்வு மற்றும் சித்ரவதை செய்து, கொலை செய்த வழக்கில் பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி லோலா (வயது 12) கடந்த 2 நாட்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற பின் லோலா வீடு திரும்பாத நிலையில் இவர்களது குடியிருப்பு பகுதி அருகே அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர் காணப்பட்டுள்ளார். இதனால், சிறுமியின் பெற்றோருக்கு அச்சம் தோன்றியுள்ளது.


இந்நிலையில், குடியிருப்பு கட்டிடத்தின் பின்பகுதியில் பிளாஸ்டிக் பெட்டி ஒன்றில் துணிகளின் கீழே சிறுமியின் உடல் மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனை வீடின்றி, அந்த பகுதியில் சுற்றி திரிந்த நபர் ஒருவர் முதலில் கவனித்துள்ளார்.

பின்னர், இதுபற்றிய தகவல் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை முடிவு

12 வயது சிறுமி வன்புணர்வு..! சித்ரவதை செய்து கொலை - 24 வயது பெண் உட்பட இருவர் கைது | 12 Year Old Girl Abuse Tortured Killed France

சிறுமியின் கழுத்தில் பெரிய அளவில் காயம் இருந்துள்ளது என்றும் சிறுமி லோலா மூச்சு திணற செய்ததில் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.


இக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் 6 பேரை பிடித்து விசாரித்து பின்பு, 4 பேர் விடுவித்துள்ளனர்.


இந்த வழக்கில் 24 வயது பெண்ணை பாரீஸ் நகரின் வடமேற்கு புறநகரான போயிஸ்-கொலம்பிஸ் பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.

சித்ரவதை, வன்புணர்வு

12 வயது சிறுமி வன்புணர்வு..! சித்ரவதை செய்து கொலை - 24 வயது பெண் உட்பட இருவர் கைது | 12 Year Old Girl Abuse Tortured Killed France

இந்த சம்பவத்தில், இளம்பெண்ணுக்கு புகலிடம் கொடுத்து வாகனத்தில் ஏற்றி வந்த சந்தேகத்திற்குரிய 43 வயது நபரும் கைது செய்யப்படலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.



15 வயதுக்கு உட்பட்ட சிறுமியை சித்ரவதை, வன்புணர்வு செய்து, கொன்று உடலை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *