செய்திகள்

21 வயது யுவதி சுட்டுக்கொலை – Jaffna Muslimவவுனியா, நெடுங்கேணி பகுதியில் இன்று (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுங்கேணி, பகுதியில் வீடடில் இருந்த 21 வயது யுவதி ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த யுவதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் நெடுங்கேணி, சிவா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா (21 வயது) என்ற யுவதியே மரணமடைந்தவராவார்

குறித்த சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-தீபன்-

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *