செய்திகள்

அமெரிக்காவில் இருந்து ஜனாதிபதிக்கு அழைப்பு வராமல் இருக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம்


அரசமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று விமல் வீரவன்ச தலைமையிலான ‘உத்தர லங்கா சபாகய’வின் தேசிய அமைப்பாளர் உதய கம்மன்பில ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,“22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்காவில் உள்ள பஸில் ராஜபக்ச நடவடிக்கை எடுப்பாரா என்ற ஐயம் எமக்கு உள்ளது.

எனவே, அமெரிக்காவில் இருந்து ஜனாதிபதிக்கு அழைப்பு வராமல் இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றோம். 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தோற்குமானால் அது ஜனநாயகத்துக்கு விழுந்த அடியாக அமையும்.”என கூறியுள்ளார். TW

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *