22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மொட்டு கட்சி அதிபர் ரணிலிடம்இரண்டு நிபந்தனைகளை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி இரட்டைக் குடியுரிமையை தொடர்வது மற்றும் நான்கரை ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என்பதே அந்த இரண்டு நிபந்தனைகள் ஆகும்.
அந்த இரண்டு நிபந்தனைகளும் நிறைவேற்றப்படாவிட்டால், 22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு வாக்களிக்க முடியாது என அரசாங்கத்திற்கு அறிவிக்க மொட்டு கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
ரணிலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை
கடந்த வாரம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இந்த விடயம் பேசப்பட்டதுடன், முதன்முறையாக சட்டமா அதிபரும் இதில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டமா அதிபரின் கருத்து
நான்கரை வருடங்களுக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் சரத்தை உள்ளடக்கலாம் என சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நான்கரை வருடங்கள் நிறைவடையும் வரை நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை எனஅதிபர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.