நன்றியுள்ள ஜீவனால் தொலைந்துபோன பெண்ணாருவரின் பெறுமதியான பொருட்கள் மீண்டும் கிடைத்த நிலையில் குடும்பமே மகிழ்ச்சி கடலில் மூழ்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் கண்டி அலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பணப்பையுடன் வந்த நாய்
கடந்த 15ஆம் திகதி இரவு வெளியே சென்றிருந்த வீட்டில் வளர்க்கும் நாய், கடையொன்றுக்கு முன்னால் வீதியில் விழுந்துகிடந்த பணப்பையை கௌவிக்கொண்டுவந்து, தன்னுடைய கூடாரத்துக்கு அருகில் போட்டுள்ளது.
பாதணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கடிக்கும் பழக்கத்தை உடைய அந்த நாய், அந்த பணப்பையை மட்டும் கடித்து சேதப்படுத்தாது, தனது முன்னங்கால்கள் இரண்டிலும் அழுத்தி பிடித்துக்கொண்டிருந்துள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் அந்த பையை நாயிடமிருந்து மீட்டெடுத்து, அதனை திறந்து பார்த்துள்ளனர். அதில், 7ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் பெறுமதியான தங்கச் சங்கிலி காணப்பட்டது.
அத்துடன் அந்த பணப்பையில் இருந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்ட வீட்டு உரிமையாளர்கள், உரிமையாளரை வீட்டுக்கு அழைத்து அந்தப் பணப்பையை கையளித்துள்ளனர்.
உரிமையாளரிடம் ஒப்படைப்பு
இது தொடர்பில் அலதெனிய காவல்துறை பொறுப்பதிகாரிக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.
காவல்துறையினருடன் வீட்டுக்கு வந்த பணப்பையின் உரிமையாளர் அதனை பெற்றுச்சென்றுள்ளார்.
நாயின் இந்த செயலால் தமது தொலைந்து போன பெறுமதியான பொருட்கள் கிடைத்ததால் அந்த குடும்பமே மகிழ்ச்சி கடலில் மூழ்கி போயுள்ளது.