மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த ஆட்சியின் வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட பலர் அதற்கான அழுத்தங்களை, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுத்து வருகின்றனர்.
அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகளை கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்பட்டன.
எனினும் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் ராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் எஞ்சிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க அதிபர் மீண்டும் மறுத்துள்ளார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கே அமைச்சுப் பதவிகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்,