Uncategorized

யாழ் – திருநெல்வேலியில் கவனயீர்ப்பு நடவடிக்கை


போதைப் பாவனை எதிர்ப்பு

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், பஃவ்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்தும் “போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிரஜைகளாக உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு திருநெல்வேலி முத்துதம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கவனயீர்ப்பில் வீதியோர ஆற்றுகை

யாழ் - திருநெல்வேலியில் கவனயீர்ப்பு நடவடிக்கை | Protest In Jaffna Thirunelveli



குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.



இதனையடுத்து குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டின் தொடர்ச்சியாக திருநெல்வேலி பொதுச்சந்தை முன்பாகவும் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.


குறித்த கவனயீர்ப்பில் வீதியோர ஆற்றுகை இடம்பெற்றதுடன் குடிசார் அமைப்புக்கள், உள்ளூராட்சிமன்ற பெண் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

யாழ் - திருநெல்வேலியில் கவனயீர்ப்பு நடவடிக்கை | Protest In Jaffna Thirunelveli



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *