விமான எரிபொருள் விநியோக உரிமை
விமான எரிபொருள் விநியோகத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏகபோக உரிமை தளர்த்தப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டண வசூலிப்பு
இதன்படி, தேவைப்பட்டால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் குழாய் அமைப்பு மற்றும் சேமிப்பு வசதிகளை பயன்படுத்தி விமான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதற்காக கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.