பெட்ரோலிய தொழிற்சங்கத்தினர் இன்று (18) செவ்வாய்கிழமை சுகயீன விடுமுறையில் சேவைக்கு சமூகமளிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவ, சபுகஸ்கந்த மற்றும் முத்தராஜவெல ஆகிய இடங்களில் உள்ள CPC எரிபொருள் விநியோக நிலையங்களின் ஊழியர்களே இவ்வாறு விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள பெட்ரோலிய உற்பத்தி விசேட கட்டளைகளுக்கான திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய விநியோகத்தில் இடையூறு
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பெட்ரோலிய விநியோக செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர், கலாநிதி அசோக ரன்வல இந்த விடயத்தினைக் தெரிவித்துள்ளார்.