தமிழ் முற்போக்கு கூட்டணி இரண்டாக பிளவுபடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக கூட்டணியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் முதற்கட்டமாக கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சந்திரா சாப்டர் விலகவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணியின் தலைமைப்பீடத்தின் தன்னிச்சையான செயற்பாடு காரணமாகவே செயலாளர் இந்த முடிவை எடுக்கவுள்ளார் எனவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில், இன்று அல்லது நாளை அவரது பதவி விலகல் தொடர்பில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில், இந்த செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பில் அறிந்து கொள்ளம் நோக்கில் எமது ஐபிசி தமிழின் செய்தி பிரிவில் இருந்து அக்கட்சியின் தலைவர் மனோ கணேசனுடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.