இலங்கை எழுத்தாளருக்கு கிடைத்த கௌரவம்
2022-ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசை (Booker Prize) புனைகதைக்கான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக (Shehan Karunatilaka) வென்றுள்ளார்.
உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய “தி செவன் மூன்ஸ் ஒப் மாலி அல்மேடா” (மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்) என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது.
லண்டனில் ரவுண்ட்ஹவுஸ் அரங்கில் நடைபெற்ற இந்த புக்கர் பரிசு வழங்கும் விழாவில், பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவியும், ராணியுமான கமிலாவிடமிருந்து ஷெஹான் கருணாதிலக தனது விருதை பெற்றுக்கொண்டார்.
மேலும் அவருக்கு 50,000 பவுண்டுகள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
ராணியிடமிருந்து கிடைத்த விருது
இது அவரது இரண்டாவது நாவலாகும். இதில், 1990 இலங்கை உள்நாட்டு போரில் உயிரிழந்த ‘மாலி அல்மேடா’ எனும் ஓரினசேர்க்கை போர் புகைப்படக் கலைஞரை பற்றிய கதையை எழுதியுள்ளார்.