Uncategorized

யாழில் உறங்கச்சென்று சடலமாக கிடந்த இளைஞன்! விசாரணையில் வெளிவந்த தகவல்


யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.



நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞன் நேற்றிரவு உறங்கச் சென்றுள்ள நிலையில், காலையில் சடலமாக கிடந்துள்ளார்.

குடும்பத் தகராறு

யாழில் உறங்கச்சென்று சடலமாக கிடந்த இளைஞன்! விசாரணையில் வெளிவந்த தகவல் | Young Man Diedkaravetti Jaffna Mysteriously Today


வீடு ஒன்றின் கட்டுமான பணிக்காக நீர்வேலி பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து கொண்டிருந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த இளைஞரின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணை செய்யப்பட்ட வேளை, குடும்பத் தகராறு காரணமாக சில தினங்களுக்கு முன்னர் கைகலப்பு ஏற்பட்டு உடலில் காயங்கள் ஏற்பட்டமையால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.

உடற்கூற்று பரிசோதனை

யாழில் உறங்கச்சென்று சடலமாக கிடந்த இளைஞன்! விசாரணையில் வெளிவந்த தகவல் | Young Man Diedkaravetti Jaffna Mysteriously Today


இறப்புச் சம்பவம் தொடர்பான உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ் வைத்தியசாலை வீதியில் கட்டுமான பணிக்காக தங்கியிருந்து வேலை செய்த திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *