Uncategorized

பொருளாதார நெருக்கடி நீடித்தால் ஏற்பட போகும் பாதிப்பு..! பிச் ரேட்டிங்ஸ் நிறுவனம் எச்சரிக்கை


இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் நீடித்தால் அது தனியார் நிறுவனங்களில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துமென பிட்ச் ரேட்டிங் எனப்படும் தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.



நுகர்வோர் பொருட்கள், மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கட்டட நிர்மாணங்கள் பாரிய பாதிப்பை இதன்மூலம் சந்திக்குமென அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


இலங்கையில் பொருளாதார நெருடிக்கடியானது நீண்டகாலத்திற்கு நீடித்தால் இலங்கை பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடும் என பிட்ச் ரேட்டிங் (Fitch Rating) நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிட்ச் ரேட்டிங் (Fitch Rating) தரப்படுத்தல்

பொருளாதார நெருக்கடி நீடித்தால் ஏற்பட போகும் பாதிப்பு..! பிச் ரேட்டிங்ஸ் நிறுவனம் எச்சரிக்கை | Fitchratings Impact On Rated Sri Lankan Corporates

பிட்ச் ரேட்டிங் (Fitch Rating) தரப்படுத்தல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருளாதார நெருக்கடியினால் நுகர்வு பொருட்கள், சில்லறை வர்த்தகம், மின் உற்பத்தி, கட்டிட துறை பாதிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் பணவீக்கமானது அனைத்து துறைகளின் இலாபத்தை பாதிக்கும் என்பதோடு, இறக்குமதி தடையானது சீரான பொருளாதார செயல்பாடுகளுக்கு இடையூராக காணப்படுமெனவும் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.



மேலும் உயர் வட்டி வீதமானது கூட்டுறவு வர்த்தகத்தை வெகுவாக பாதிக்கும் எனவும் பிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *