அம்பலாங்கொடை கடலில் இன்று (20) பிற்பகல் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் குழுவொன்று அடித்துச் செல்லப்பட்டு அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவர் காணாமல் போயுள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினரை் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்மற்றும் காணாமல் போனவர் அம்பலாங்கொடை கிராமிய பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் இரு மாணவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த மாணவனின் சடலம்
உயிரிழந்த மாணவனின் சடலம் பலபிட்டிய ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன மாணவனை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்த்தனர்.
இவேளை கொழும்பு காலி கடலில் நீராடிய மாணவர்கள் இருவர் கடந்த சில தினங்களுக்கு நீராட சென்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.