Uncategorized

யாழில் நீண்ட காலமாக தலை மறைவாக இருந்த நபர் கைது..!


மல்லாகம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிடிவிறாந்து விதிக்கப்பட்டு நீண்ட காலமாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரகசிய தகவல்

யாழில் நீண்ட காலமாக தலை மறைவாக இருந்த நபர் கைது..! | Drug Abuse In Jaffna District Increased Sri Lanka

இன்றைய தினம் குருநகர் ஐந்து மாடி பகுதியில் வைத்து யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலனாய்வு பிரிவிருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் 5 மாடி பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை, 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளார்.


2021 ஆண்டு ஹெரோயின் போதை பொருளுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில் மல்லாகம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில்மல்லாகம் நீதிமன்றால் பிடிவிறாந்து விதிக்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்திருந்த குறித்த நபர் தலை மறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *