Uncategorized

சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவர்களின் நினைவேந்தல்!


சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களான கஜன் சுலக்சன் ஆகியோரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

இதன்போது யாழ் பல்கலைக்கழகத்தில் கஜன் மற்றும் சுலக்சனின் உருவப்படத்திற்கு மாணவர்களால் ஈகைச்சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.   

படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள்

சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவர்களின் நினைவேந்தல்! | Jaffna University Police Gun Shoot Student Death


2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதியன்று இரவு நேரத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கருகில்
சிறிலங்கா காவல்துறையினரின் மிலேச்சத்தனமான துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நடராசா கஜன், பவுண்ராஜ் சுலக்சன் ஆகியோர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *